கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட காவல்துறை ஆணையர்

8 February 2021, 5:39 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் திருச்சி காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பூசி போடும் பணி துவங்கியது, இதில் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடும் பணி துவங்கியது, தற்போது 2ம் கட்டமாக காவல்துறையினருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் லோகநாதன் பேசியதாவது:- திருச்சி மாநகரத்தில் இன்று முதல், நான் உட்பட 1,824 பேருக்கு கொரானா தடுப்பூசி செலுத்தப்படும். திருச்சியில் காவல் துறையினருக்கு 5 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறினார். திருச்சியில் இது வரை டாக்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என இதுவரை 3,146 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதில் திருச்சி மருத்துவக் கல்லுாரி முதல்வர் வனிதா மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 0

0

0