மக்கள் கூடும் இடங்களை கண்காணிக்க குழு அமைப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
4 August 2021, 4:27 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனோ 3ம் அலையை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதலில் தொடங்கப்பட்ட மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ தடுப்பூசி மையத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி அன்றைய முதல்வரால் துவங்கப்பட்ட இந்த மையம் இன்று 200வது நாளாக செயல்பட்டு வருகிறது. தமிழக அளவில் ஒரு மையத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமனோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட மையம் என்ற சிறப்பை பெற்ற இந்த மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் உள்ளிட்டோரை பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் தாங்களாகவே முன்வருக்கின்றனர். கொரோனோ 3 ஆம் அலையை தடுக்க 30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு மக்கள் கூடும் இடங்களில் நிலையான கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 3 ஆம் அலையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனோ தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Views: - 119

0

0