சாயப்பட்டறை கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு…

12 August 2020, 11:13 pm
Quick Share

கரூர்: ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்தில் இருந்து பிரதான வாய்க்காலை புனரமைத்தல் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் நொய்யலை அடுத்த ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்தில் இருந்து பிரதான வாய்க்காலை புனரமைத்தல் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆரால் இந்த திட்டம் உருவாக்கி 19,500 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் இருந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தண்ணீர் வந்து செழுமையாக இருந்த போது திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் வந்து இப்பகுதி பாசன நிலங்கள் பால்பட்டு போனது.

அப்போது நொய்யல் ஆற்றிக் தண்ணீர் திறக்க கூடாது என்று விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால் 18 ஆண்டுகள் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு அந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டு 500 டி.டி.எஸ் குறைவாக உப்புத் தன்மை தண்ணீர் இந்த அணைக்கு கொண்டு வந்து கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் அதிகம் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு ச்ந்ன்று பவானி சாகர் ஆற்றில் 2500 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றனர். கீழ்பவானி மூலம் வரும் உபரி நீரையும் இந்த அணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் இந்த திட்டம் குறித்து விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருப்பூர் மாவட்டம், கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறை கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வகை படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்றார். உச்சநீதிமன்றம் உத்தரப்படி அந்த தொகை பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆண்டு நிச்சயமாக இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்படும் என்றார்

Views: - 2

0

0