எச்.ராஜா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் யுனிவர்சல் ஜமாத்தினர் புகார்

3 September 2020, 2:00 pm
Quick Share

திருச்சி: பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது தமிழக அமைதியை சீர்குலைக்க முயல்வதாக யுனிவர்சல் ஜமாத்தினர் திருச்சி மாநகர ஆணையர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் ராமநாதபுரம் அருகே கள்ளர் தெரு பகுதியில் வசிக்கும் அருண்பிரகாஷ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்த குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த லெப்ட்சேக், சதாம், அஜீஸ், காசிம், ரஹ்மான் உள்ளிட்ட 4 பேர் நேற்று லால்குடி நீதிமன்றத்தில் சரண்டர் ஆகினர்.
இந்த நிலையில் அந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதனை கண்டித்தும், எச்.ராஜா மத சாயம் பூசி வருவதாகவும் குற்றம் சாட்டி யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின்
மாநிலத் தலைவர் ரபீக் தலைமையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் ரபீக், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். அவரை கைது செய்து காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக தமிழகத் தலைவராக முருகன் பொறுப்பேற்ற நாள் முதல் ரவுடிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்து வருகின்றனர். இதன் மூலமாக தேர்தலை சீர்குலைத்து விடுவார்களோ? அல்லது மத வன்முறையை ஏற்படுத்தி விடுவார்களே என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே காவல்துறையினர், உளவுத் துறையினர் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Views: - 6

0

0