காவலர் தேர்வினை நடத்தாததை கண்டித்து மலர் வளையம் வைத்து சங்கு ஊதி போராட்டம்

2 September 2020, 5:09 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் காவலர் தேர்விற்கான அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான தேர்வினை நடத்தாததை கண்டித்து அரசாணை நகலுக்கு மலர் வளையம் வைத்து சங்கு ஊதி 50க்கும் மேற்பட்ட மாணவர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வு நடத்த கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்வு நடத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதனை கண்டித்து புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் 50 க்கும் மேற்ப்பட்டவர்கள் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே புதுச்சேரி அரசு மற்றும் துணைநிலை ஆளுநரை கண்டித்து அரசாணையின் நகலுக்கு மலர்தூவி, சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அரசு உடனடியாக காவலர் தேர்வு நடத்தவில்லை என்றால் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரையும் ஒன்று திரட்டி சட்டபேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.

Views: - 0

0

0