காரில் தவறவிட்ட 25-சவரன் தங்கநகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

17 October 2020, 9:17 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் காரில் தவறவிட்ட 25-சவரன் தங்கநகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் பல நாட்களாக மனு அளித்தும் கிடப்பில் உள்ள தங்களது பிரச்சனைகளை தீர்த்து கொள்வதற்காக இந்த முகாம் நடைப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட மனுதாரர்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதனிடையே ரேவதி என்பவர் குன்றத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு வாடகை காரில் வந்தபோது 25-சவரன் நகையை காரிலேயே தொலைத்து விட்டார். அதனை மீட்ட கார் ஓட்டுநர் நவீன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கார் ஓட்டுநரை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்பட்டது. நகையை தொலைத்த ரேவதியிடம் 25 சவரன் தங்கநகைகளை எஸ்பி ஒப்படைத்து அறிவுரை வழங்கினார்.

Views: - 12

0

0