சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

20 February 2021, 2:33 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேஸ் சிலிண்டருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் கடந்த 87நாட்களாக பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, மத்திய அரசு உடனடியாக விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், ரயில்வே துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும்,

படித்த இளைஞர்களுக்கு வேலையை ஏற்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது கேஸ் சிலிண்டர் உடன் திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இருந்து பேரணியாக நடந்து சென்று மெயின்கார்டுகேட் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர்கைது செய்தனர்.

Views: - 7

0

0