பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி

12 July 2021, 2:56 pm
Quick Share

சென்னை: மாட்டு வண்டியில், ஆடி சொகுசு காரை கயிறு மூலம் கட்டி , பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் வியாசர்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் பேரணியாக சென்றனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் இருந்து , வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சந்திப்பு வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தொடங்கி பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு ஸ்டீபன்சன் தெரு , ஜீவா ரயில் நிலையம் வழியாக அம்பேத்கர் கல்லூரி சிக்னல் வரை இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.இறுதியில் அம்பேத்கர் கல்லூரி அருகே ஆடி சொகுசு காரை மாட்டு வண்டியில் பூட்டி இழுத்துச் செல்வது போல செய்து மத்திய அரசிற்க்கு காங்கிரஸார் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.  இந்த பேரணிக்கு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார்.

Views: - 58

0

0