மது அருந்தும் பிரச்சனையில் கல்லால் அடித்து கட்டிட தொழிலாளி கொலை: சக தொழிலாளி கைது

Author: Udhayakumar Raman
14 March 2021, 3:12 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூர் அருகே மது அருந்தும் பிரச்சனையில் கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் வாசுகி நகர் 5 வது தெருவில் அடுக்குமாடி வீடு கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் ஜனா (31) மற்றும் துக்குனாசாகு ஆகிய இருவரும் வேலைசெய்து வருகின்றனர். நேற்றிரவு பிரசன்னகுமார் ஜனா தனது 3 நண்பர்களை வரவழைத்து அந்த கட்டிடத்தில் மது அருந்தி உள்ளார். அப்பொழுது மற்றொரு நபரான துக்குனா சாகு நான் இந்த கட்டிடத்தின் செக்யூரிட்டி இங்கு மது அருந்த அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரசன்னகுமார் ஜனா , துக்குனா சாகு வை அடித்துள்ளார். அதன் பிறகு அனைவரும் சென்று விட்டனர். இந்நிலையில் முழு மதுபோதையில் பிரசன்னகுமார் ஜனா இரவு தூங்கிக் கொண்டிருந்த போது இரவு ஒரு மணி அளவில் துக்குனா சாகு கட்டுமானத்துக்கு வைத்திருந்த கல்லை கொண்டு பிரசன்னகுமார் தலையில் பலமாக அடித்து கொன்றுள்ளார்.

அதன் பிறகு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடம் சென்று பிரசன்னகுமார் ஜனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 83

0

0