கல்லால் அடித்து கட்டிட தொழிலாளி படுகொலை : ஈரோடு அருகே பயங்கரம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 4:39 pm
Sathy Murder -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டியில் கல்லால் அடித்து கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கட்டிட தொழிலாளியான இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அவரது மகள் வீட்டில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இன்று காலை அவரது மகள் வீட்டில் அருகே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் உள்பகுதியில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்துபோன செல்வத்தின் உடலை பரிசோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது தலையில் கல்லால் பலமாகத் தாக்கி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கல்லால் அடித்து கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 164

0

0