வரும் 8ம் தேதி சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனை கூட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

3 November 2020, 9:24 pm
Quick Share

ஈரோடு: வருகின்ற 8ம் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சுரில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு வணிகர் சங்க கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத்தலைவர் விக்ரமாராஜா பேசியதாவது:- வருகின்ற 8ம் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

பண்டிகை காலங்களில் கடைகளில் கொரோனோ ஆய்வு என்ற பெயரில் அபதாரம் விதிப்பதை தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வேளாண் சட்டத்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து நீக்கிப்பட்டு உள்ளதால் இதன் விலை உயர வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராடும். அதுமட்டுமல்லாமல் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை ஒன்று திரட்டி டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டம் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 17

0

0