தமிழக டிஜிபி தலைமையில் கோவையில் ஆலோசனைக் கூட்டம்

Author: kavin kumar
6 August 2021, 5:57 pm
Quick Share

கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீலகிரி மாவட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வந்தார். தொடர்ந்து இன்று அவர் கோவை வந்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு அவர் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார். இதில் மேற்குமண்டல ஐஜி., டி.ஐ.ஜி., கோவை, திருச்சி, சேலம் மாநகர காவல் ஆணையர்கள், மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக டிஜிபி.,யாக பெறுப்பேற்ற பின் சைலேந்திரபாபு முதல் முறையாக கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 190

0

0