பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்

16 October 2020, 4:37 pm
Quick Share

விருதுநகர்: சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைதலைவர் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் நியமன அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைதலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம் நகரக் கழகச் செயலாளர் நைய்னார் முஹம்மது, நகரக் கழக துணைச் செயலாளர் கண்ணன் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மச்சராசா,

மாநில அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் சங்கரலிங்கம், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாக சுப்பிரமணியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செல்வம், ஒன்றிய மாணவரணி செயலாளர் மாரிக்கனி, ஒன்றிய இணைச் செயலாளர் சின்னசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய பொருளாளர் ராஜசேகர், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் மாரியப்பன், நகர அம்மா பேரவை செயலாளர் எஸ். எஸ் .கணேசகுரு, ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் குருகணேஷ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 33

0

0