தொல். திருமாவளவனுக்கு பாராட்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

11 July 2021, 1:54 pm
Quick Share

திருச்சி திருச்சியில் தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் தொல். திருமாவளவனுக்கு பாராட்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் இன்று திருச்சி நம்பர் 1டோல்கேட் அடுத்துள்ள தாளக்குடியில் மாவட்ட அவைத்தலைவர் எதுமலை துரைசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் இரா.மனோகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியார் மண் மீட்ட தமிழ்மானப் போராளி திருமாவளவனுக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி பாராட்டு விழா நடத்துவது, மேலும், இந்தப் பாராட்டு விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ‘

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், உள்ளிட்டோரை வாழ்த்துரை வழங்க அழைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.மேலும், நடைபெறும் இந்த பாராட்டு விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்வது என கூட்டத்தில்என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் திருச்சி தமிழாதன்,மக்கள் சமூக நீதிப் பேரவைநிர்வாகிகள் ஷோபனா, கோவிந்தன், பச்சைமுத்து, மாதப்பன், சண்முகம், இளங்கோ, நல்லுசாமி, சசிகலா, பிச்சைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Views: - 91

0

0