நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால் தொடர் போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை
21 November 2020, 8:46 pmதஞ்சை: 3 ஆண்டுகளாக 27.5 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாத நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததால் தஞ்சையில் இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் சலசலப்பு நிலவியது.
தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு 2015 16 .2016 17 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 27.5 கோடியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை வழங்காததால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சர்க்கரை ஆலை பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் நிலுவைத்தொகை இரு தவணைகளாக தருவதாகவும், அதுவும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வழங்குவதாக அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் இடமும் எச்சரித்தனர்.
0
0