EMI செலுத்த கூறி தொடரும் மிரட்டல்.! மகளிர் சங்கத்தினர் புகார்.!!
3 August 2020, 3:46 pmகோவை : கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வேலை இழந்து நிற்கும் சூழலில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் தவணை கட்டக்கோரி மிரட்டுவதாக மகளிர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று மனு ஒன்றை அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் பகுதியில் உள்ள மகளிர் குழுக்கள் சார்பில் பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ளோம்.
கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்து, வருவாய் இழந்து நிற்கும் சூழலில் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் எங்களை தவணை கட்ட சொல்லி தினமும் செல்போன் மூலமும் நேரில் வந்தும் கடுமையாக பேசுகிறார்கள். எனவே இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.