வவுச்சர் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நூதன ஆர்ப்பாட்டம்….

10 August 2020, 2:45 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களாக பணிபுரியும் வாரிசுதாரர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வவுச்சர் பணிபுரிந்து வரும் வாரிசுதாரர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் காமராஜர் சதுக்கம் அருகே பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தவறும்பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என வவுச்சர் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Views: - 12

0

0