கூட்டுறவு சங்கத்தில் போலி விவசாயிகள் பேரில் கடன் : ஆட்சியரிடம் மனு!!

14 September 2020, 5:55 pm
Nagercoil Cooperative - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி விவசாயிகள் பெயரில் கடன் வழங்கப்பட்டது குறித்து ஏற்கனவே நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவருமான முருகேசன் நாகர்கோவிலில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர் கிருஷ்ணகுமார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் உதவியாளராக இருந்த இவர் மீது ஏற்கனவே பாலியல் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வரும் நிலையில் விதிகளுக்கு புறம்பாக தனியார் பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வருவதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு சங்க உறுப்பினர் முருகேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை செயல்படுத்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி விவசாயிகளின் பெயரில் கடன் வழங்கப்பட்ட விவரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நகை கடன் பெற்றவர்கள் உடைய நகைகள் லாக்கரில் இருப்பு விவரம் அதன் உண்மைத் தன்மை போன்றவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Views: - 0

0

0