தொழிலாளர் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்: காவல்துறையினர்- தொழிற்சங்கத்தினர் இடையே தள்ளுமுள்ளு

3 February 2021, 7:16 pm
Quick Share

கோவை: தொழிலாளர் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டத்திற்கு கோவையில் திரண்ட தொழிற்சங்கத்தினரை காட்டு மிராண்டித்தனம்மாக காவல்துறையினர் கையான்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி அடிமையாக்கும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 4 தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிக்கும் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் கோவையில் ஈடுபட்டனர். மத்திய அரசு தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில் கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டம் 2020 ஐ திரும்ப்பெற வலியுறுத்தியும், தனியார் மயமாக்கலை கண்டித்தும், நாடு முழுவதும் சட்ட நகல் எரிக்கும் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திரண்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் துவங்கும்போதே ஆர்ப்பாட்டத்திற்குள் உள்ளே நுழைந்த காவல்துறையினர் தலைவர்கள் கையில் இருந்த சட்ட நகலை பறித்தனர். இதனால் இலுதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தனது முழு பலத்தையும் பயண்படுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கியும் கைது செய்தனர். மேலும் திட்டமிட்டு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு அப்பகுதியில் இலுந்த கடைகளை அடைக்கநிர்பந்தித்து அடைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஐஎன்டியூசி தலைவர் துளசிதாஸ், ஏஐடியுசி தலைவர் ஆறுமுகம், சி. தங்கவேல், எச்எம்எஸ் தலைவர் ராஜாமணி, சிஐடியூ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, மனோகரன், எல்பிஎப் மணி, வணங்காமுடி, எம்எல்எப் தியாகராஜன், எஸ்டிடியு ரகுபுநிஸ்தார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Views: - 11

0

0