புதுச்சேரியில் 32 பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

27 August 2020, 10:38 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தபடும் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பால் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தொற்று 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. படுக்கை வசதிகள் இல்லாததால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெளியே சுற்றும் போக்கு உள்ளது. தற்போது படுக்கை வசதிகளை அதிகரிக்கும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவும் 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் புதுச்சேரி ஆட்சியரும், சுகாதாரத்துறைச் செயலருமான டாக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ”புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் பகுதிகள், பரவுதல் விகிதம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அதில் கொரோனா தொற்று படுவேகமாகப் பரவும் 32 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். இங்கு வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இங்குள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலங்கள் மூடப்பட்டிருக்கும். இப்பகுதி மக்களின் வசதிக்காக அங்குள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

மருத்துவத் தேவையைத் தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது. முழு ஊரடங்கு பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள் மற்றும் பால் பூத் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு உண்டு. இப்பகுதியைச் சாராதோர் ஊரடங்கு பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இப்பகுதி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 32 பகுதிகளின் விவரம் பின் வருமாறு:

சண்முகாபுரம்,

தட்டாஞ்சாவடி,

குண்டுப்பாளையம்,

திலாஸ்பேட்,

தென்றல் நகர்,

ஐயப்பன் நகர்,

சக்தி நகர்,

அனிதா நகர்,

அய்யனார் கோயில் தெரு(ஓ.கே பாளையம்),

புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை

தியாகு முதலியார் நகர்,

முல்லை நகர்,

பெரியார் நகர்,

கங்கையம்மன் கோயில் வீதி,

குறிஞ்சி நகர்,

மடுவுபேட்,

பெத்துச்செட்டிப்பேட்,

தில்லை நகர் முதல் வசந்தம் நகர் வரை,

புதுநகர், கணுவாப்பேட்டை சாலை சந்திப்பு,

ஆர்.கே நகர்,

பிச்சவீரன்பேட், வாய்க்கால் தெருக்கள் 1, 2, 3, 4,

ஜெ.ஜெ.நகர்,

ரெயின்போ நகர்,

குமரகுருபள்ளம்,

கோவிந்தசாலை,

செந்தாமரை நகர்,

சோலை நகர்,

வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டை நகரப் பகுதி,

முத்தைய முதலியார் தெரு,

புனித ரொசாரியோ தெரு,

காட்டாமணிக்குப்பம் தெரு,

உளவாய்க்கால்,

தர்மாபுரி & பெருமாள் கோயில் வீதி,

பொறையூர் பேட் – புதுநகர்,

பங்கூர்பேட்.

அந்த உத்தரவில், ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பாலகங்கள் போன்றவை வழக்கம் போல செயல்படும். அத்யாவசிய தேவைகளுக்காக மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 6

0

0