பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி:கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட வகுப்பறை

Author: Udhayakumar Raman
13 September 2021, 5:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவியதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இணையதளம் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கொரோனா தொற்றின் வீரியம் குறைந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மாணவியுடன் பயின்று வந்த 57 சக மாணவிகளுக்கும், அந்த வகுப்பறையில் பாடம் நடத்திய ஐந்து ஆசிரியர்களுக்கும் என 62 பேருக்கு, இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நாளை வர உள்ள நிலையில், வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் குறிப்பிட்ட அந்த வகுப்பு மாணவர்கள் மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் வீட்டிலேயே தங்களை தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட பள்ளி கல்விதுறை மற்றும் சுகாதார துறையினர் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

Views: - 79

0

0