முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

30 August 2020, 4:47 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட மீன் மற்றும் இறைச்சி, பூ கடைகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

இன்று தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தமிழக அரசால் ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பால் நிலையங்கள் மருத்து நிலையங்கள் தவிர மற்ற எந்த நிறுவனமும் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஜவுளி கடைகள் வணிக நிறுவனங்கள் தேநீர் கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் நகராட்சி பகுதியில் செயல்பட்ட மீன், இறைச்சி, பூ கடை செயல்பட்டு வந்தன.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் நகராட்சி ஊழியர்கள் ஊரடங்கு விதியை மீறி செயல்பட்டு வந்த 7 மீன் கடைகள், 2 இறைச்சி கடைகள், 7 பூக்கடைகள், ஒரு பழக்கடை உட்பட 17 கடைகளிலிருந்து எடை இயந்திரம் மற்ற உபகரணங்கள் விற்பனைக்கு வைத்து இருந்த மீன்கள், இறைச்சி மற்றும் பூக்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் என மொத்தம் 12 ஆயிரம் அபாரம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Views: - 1

0

0