முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

By: Udayaraman
4 October 2020, 6:47 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தஞ்சையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வெளியில் வருபவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் எனவும்,

அணியாவிட்டால் 100 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ருபாய் அபராதம் விதித்து மாஸ்க் வழங்கி, நடமாடும் கொரோனா பரிசோதனை நிலையதத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்தனர்.

சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதமும், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொரோனா பரிசோதனையின்போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டனர். தினமும் இது போல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 35

0

0