திருச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா:தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை

Author: Udhayakumar Raman
6 September 2021, 4:59 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பகுதியில் அருகே இரட்டை வாய்க்கால் அருகே உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த ஒன்றாம் தேதி காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்தார். அவருக்கு காய்ச்சல் இருப்பதைக் கண்ட ஆசிரியர் இதனை தொடர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2ம்தேதி அவர் பள்ளிக்கு வரவில்லை. 3ம் தேதி மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாசிட்டிவ் என்று தொிந்தது.

இதனை தொடர்ந்து 4ம் தேதி அந்த வகுப்பிற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது . இச்சூழலில் பள்ளி நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி . ஆலோசனையின் முடிவில் பள்ளி நிறுவனர் சுரேஷ்சுவாமிஜி பள்ளிக்கு இன்று முதல் ஒரு வாரம் விடுமுறை என்று அறிவித்து உள்ளார். பள்ளி விடுமுறையில் இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அடுத்த திங்கட்கிழமை முதல் பள்ளி தொடங்கும் என்று பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 125

0

0