புதுச்சேரியில் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

29 January 2021, 1:23 pm
Salem Corona Teacher - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 39004 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 16 நபர்களுக்கும், காரைக்காலில் 3 நபர்களுக்கும், மாஹேவில் 12 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 295 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 38062 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லாததால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647 ஆகவே உள்ளது. மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 39004 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.

Views: - 0

0

0