புதுச்சேரியில் 95 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

8 November 2020, 4:26 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 35, 838 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 69 நபர்களுக்கும், காரைக்காலில் 5 நபர்களுக்கும், ஏனாமில் 5 நபர்களுக்கும் மாஹேவில் 16 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,170 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34067 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லாததால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 601 ஆகவே உள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35838 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.

Views: - 15

0

0