கொரோனா தொற்றால் அரசு பெண் மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : தடுப்பூசியை போட்டுகொண்ட பின்னரும் பலியான சோகம்

8 July 2021, 4:56 pm
Quick Share

வேலூர்: கொரோனா தொற்றால் அரசு பெண் மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம்,வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவராக பணியாற்றியவர் ஹேமலதா. இவரது கணவர் டேவிட் சுரேஷ் சென்னையில் உள்ள ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹேமலதா கொரோனா தீவிர நேரத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஜீன் 29ம்தேதி கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தடுப்பூசியை செலுத்திகொண்ட பின்னரும் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நருவீ மருத்துவமனையில் சுமார் ஒரு மாததிற்கு மேலாக ஹேமலதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அவரின் உடல் நிலை மோசமடையவே வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாரான போது மருத்துவர் ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு ஜீவிதா என்கிற 20 வயதுடைய ஒரு மகளும் உள்ளார். வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் பலியாகி வருகின்றனர். கொரோனா நோய் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் நோய் தொற்று அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 364

0

0