கொரோனா பரிசோதனை முகாமை முதலமைச்சர் ஆய்வு

20 September 2020, 3:52 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமை முதலமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை மாநிலத்தில் 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று சாரம் பகுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமை முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆய்வின் போது மருத்துவ அதிகாரிகளிடம் பரிசோதனை தொடர்பாக கேட்டறிந்த முதலமைச்சர் நாராயணசாமி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா பரவாது என பொதுமக்களிடம் அறிவுருத்தினார்.

Views: - 12

0

0