கொரோனா அச்சுறுத்தல்: சூலூர் ஆர்.டி.ஓ அலுவலகம் மூடல்..!

5 August 2020, 10:19 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மோட்டார் வாகன அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

கோவையில் இன்று பெண் மருத்துவர் உட்பட 112 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சூலூர் பகுதியில் மட்டும் 8 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் சூலூர் மோட்டார் வாகன அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரும் ஒருவர். இதன் காரணமாக அந்த அலுவலகம் அடுத்த 6 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தொற்று நீக்கம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அலுவலகம் நாளை (6ம் தேதி) முதல் வரும் 11ம் தேதி வரை இயங்காது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0