டாஸ்மாக் சூப்பர்வைசருக்கு கொரோனா:கடை சீல் வைக்கபட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்….

18 August 2020, 5:50 pm
Quick Share

அரியலூர்;  அரியலூரில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை சீல் வைக்கபட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அரியலூர் நகரில் ராமலிங்கபுரம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சூப்பர்வைசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டு சீல் வைக்கபட்டது. இக்கடையில் வாடிக்கையாக மது அருந்துவோர் சீலிட்ட கடையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் இந்த கடையில் கிராமத்து பகுதியிலிருந்து ஏராளமானோர் மது வாங்கியுள்ளதால் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.