அரியலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கொரோனா தடுப்பூசிகள்

13 January 2021, 7:12 pm
Quick Share

அரியலூர்: தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த கொரோனா தடுப்பூசிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசிகளை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசிகள் 13 ஆம் தேதியான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இதனை அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா பார்வையிட்டனர். அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ள தடுப்பூசிகள் முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு அளிக்கபட உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்திற்கென வரவழைக்கபட்ட 3324 கொரோனா தடுப்பூசிகள் விளாங்குடி அரசு மருத்துவ குடோனில் வைக்கபட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கபட உள்ளதாகவும், மேலும் தேவைபடும் இடங்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கபடும் என அரசு தலைமை கொறடா தாமரை.இராஜேந்திரன் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Views: - 4

0

0