முசிறி தாசில்தாருக்கு கொரோனா வைரஸ் உறுதி

1 August 2020, 2:36 pm
Quick Share

திருச்சி: முசிறி தாசில்தாருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து முசிறி வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் பரிசோதனைகளும் அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரனோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் முசிறி தாசில்தார் ஆறுமுகம் என்பவருக்கு கொரேனோ வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.

இதனால், வட்டாட்சியர் அலுவலகம் முசிறி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்தபட்டது. அதனை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தாசில்தாருக்கு கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. முசிறி தாசில்தாருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.