கொரோனா எதிரெலியாக உழவர் சந்தை தற்காலிகமாக மூடல்…

3 August 2020, 5:14 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் உள்ள உழவர் சந்தையில் செயல்பட்டுவந்த காய்கறிக்கடை உரிமையாளர்கள் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி அடுத்து மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக உழவர் சந்தை மூடப்பட்டது

விருதுநகர் மதுரை செல்லும் சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் 24 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக இங்கு காய்கறி வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதை அடுத்து இங்கு செயல்படும் கடைகளில் உரிமையாளர்கள் பணியாளர்கள் என 44 நபர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சி சார்பாக கொரோனா கண்டறிய சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இங்கு கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் 5 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து ஐந்து நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்கு உழவர் சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உழவர் சந்தை இன்று முதல் மூன்று தினங்களுக்கு மூடப்படுவதாக நகராட்சி அறிவித்துள்ளது. மேலும் இது வந்து சென்ற வாடிக்கையாளர்கள் தொற்று அறிகுறி இருப்பின் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள நகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 9

0

0