கும்பகோணத்தில் 8 கல்லூரி பேராசிரியர்களுக்கு கொரோனோ உறுதி

Author: Udhayakumar Raman
31 March 2021, 2:57 pm
TN Corona - Updatenews360
Quick Share

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு கல்லூரியில் எட்டு பேராசிரியர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 16 பள்ளிகளை சேர்ந்த 217 மாணக்கர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதில் 197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றும் 6 கல்லூரியை 71 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருந்த நிலையில், மேலும் இன்று புதிதாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்த கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு எண்ணிக்கை 258 ஆக உள்ளது.

Views: - 190

0

0