கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் : சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

18 May 2021, 9:56 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊரடங்கு விதிகளை மீறி கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அனைத்து அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வஞ்சுவாஞ்சேரி பகுதியில் அரசு மதுபான கடை எண் 4096 செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான கடைக்கு அருகில் ஊரடங்கு விதிகளை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
அங்கு 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்

மதுபாட்டில்களை வாங்க மது பிரியர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு முண்டியடித்துக்கொண்டு மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவ அதிகம் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் மணிமங்கலம் காவல் துறையினரும் துறை சார்ந்த அதிகாரிகளும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டு வரும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 35

0

0