தொடர் மழை காரணமாக கவுண்டண்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்

Author: Udhayakumar Raman
14 October 2021, 6:56 pm
Quick Share

வேலூர் தொடர் மழை காரணமாக கவுண்டண்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைத்த தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், ஆந்திர தமிழக எல்லையோர பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது மோர்தனா அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கவுண்டண்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே குடியாத்தம் அருகே அக்ராவரம் ஊராட்சி நடுக்கட்டை என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே குடியாத்தம் சாலையில் இருந்து நடுக்கட்டை பகுதிக்குச் செல்ல இவர்கள் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழலில் மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அந்த ஆற்றின் வழியாகத்தான் செல்கிறது.எனவே இவர்கள் நடுக்கட்டை பகுதிக்குச் செல்ல வசதியாக அவர்கள் அனைவரும் சொந்த பணத்தை வசூல் செய்து தற்காலிக பாலம் அமைத்து பயன்படுத்தி வந்த நிலையில்,மோர்தனா அணையில் இருந்து வந்த தண்ணீரால் நேற்று இரவு தற்காலிக பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அவர்கள் குடியாத்தம் சாலைக்கு வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Views: - 38

0

0