கள்ளக் காதலுக்குள் சந்தேகம் !! கள்ளக் காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை

5 March 2021, 8:14 pm
Quick Share

நீலகிரி: கடந்த 2017-ம் ஆண்டு உதகை அருகே பைகாரா பகுதியில் கள்ளக் காதலியை சந்தேகத்தின் பேரில் மண்ணென்ணை ஊற்றி கொலை செய்த வழக்கில் ஆனந் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.

உதகை அருகே உள்ள பைக்காரா பகுதியில் வசித்துவரும் ஆனந் என்ற ஆனந்த் குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணியுடன் தகாத உறவு இருந்துள்ளது. கணவனை இழந்த ஆயிஷாவுடன் பழக்கம் ஏற்பட்ட ஆனந்தகுமார் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக கூறி அடிக்கடி சந்தேகிப்பதுடன் சண்டையிட்டு குடிபோதையில் மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.
இதில் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி தனது மரண வாக்குமூலமாக நடந்ததை கூறியதை அடுத்து பைக்காரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணாச்சல முன்பு விசாரணைக்கு வந்தது இதில் குற்றவாளியான ஆனந்த் குமாருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பு வழங்கினார்.

Views: - 1

0

0