விமானப்படையில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு : தமிழக காவல்துறை அளித்த மனு ஒத்திவைப்பு

Author: kavin kumar
21 October 2021, 8:18 pm
Quick Share

கோவை: கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் கைதானவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக காவல்துறையினர் அளித்த மனு மீதான விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரிக்கு சக அதிகாரி அமிதேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தொடர்ந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் கைது செய்யப்பட்ட அமிதேஷை விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி அக்டோபர் 30ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் கைதான அமித்தேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படி கடந்த 7 ஆம் தேதியன்று மாநகர காவல்துறையினர் கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையை 21ம் நடைபெறும் என நீதிபதி கூறியதை அடுத்து இன்று நடைபெற்றது. இதில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் இரு தரப்பினரும் அவரவர் வாதங்களை முன்வைத்தனர். இதனை அடுத்து இந்த மனு மீதான உத்தரவை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 176

0

0