திருச்சியில் நீதிமன்றம் திறப்பு: வழக்கறிஞர்கள் வெடி வெடித்து மகிழ்ச்சி

8 February 2021, 1:24 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் நீதிமன்றம் திறக்கப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள் வெடி வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து நீதிமன்றங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக வழக்கறிஞர்கள் பணி பாதிப்படைந்தது . எனவே உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த சில மதங்களுக்கு முன்பு வழக்குகள் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கொரானா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து முழு நேரமாக செயல்பட வேண்டும் என வழக்கறிஞர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் இன்று நீதிமன்றம் முழுமையாக திறக்கப்பட்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டு, பல்வேறு வழிமுறைகளை அறிவித்தது.

அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தங்கள் முழு நேரம் பணியை துவக்கினார். இதன் ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பணிகளுக்கு வந்தனர். அப்போது முன்னாள் இளம் வழக்கறிஞர் சங்க செயலாளர் மதியழகன் தலைமையில் வெடி வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் நீதிமன்றம் வருபவர்களுக்கு முக கவசம் வழங்கினர். வழக்கிற்காக நீதிமன்றம் வரும் பொதுமக்களுக்கும் முககவசம் வழங்கப்பட்டது. சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் வழக்கம் போல் நேரிடை விசாரணை நடைபெற உள்ளது.

Views: - 1

0

0