கிணற்றில் தவறி விழுந்த பசு : உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை!!
4 September 2020, 6:16 pmQuick Share
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை ஆசனூர் அரேப்பாளையம் வங்கி எதிரே உள்ள விளை நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறிவிழுந்த பசுமாட்டை கயிறு மூலம் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
Views: - 0
0
0