சிபிஎம் கட்சியினர் மோடிக்கு பாடை கட்டி சாலை மறியல்: போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

1 December 2020, 4:11 pm
Quick Share

திருச்சி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் சிபிஎம் கட்சியினர் மோடிக்கு பாடை கட்டி சாலை மறியலில் ஈடுப்பட்ட போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்த நிலையில் பல்வேறு மாநில விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 100 மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடிக்கு பாடைகட்டி நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.

Views: - 11

0

0