குமரியில் குறு, சிறு தொழில்களுக்கு கடன் உதவி …ஆட்சியர் அரவிந்த் தகவல்;

20 November 2020, 3:11 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் குறு , சிறு தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு நிதி கழகம் ஆகும் .இது தமிழ்நாடு அரசு நிறுவனம் .1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது .குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் ,உற்பத்தியை படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

நாகர்கோவில் கிளை அலுவலகத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகின்ற 30-ம் தேதி வரை நடக்கிறது.கடன் மேளா வில் டி.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும் .இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை தொழில் முனைவோர் ,தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .மேலும் விபரங்களுக்கு நாகர்கோவில் கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0