சாலையோரம் குப்பை கொட்டினால் குற்றவியல் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

7 July 2021, 5:57 pm
Quick Share

வேலூர்: சாலையோரம் குப்பை கொட்டினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அலுவலகர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசுகையில், மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியிணை தீவிரப்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும், மாநராட்சி, நகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் தாழ்வாக உள்ள பகுதிகளை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும். குறிப்பாக சாலையோரங்களில் குப்பை கொட்டும் தனியார்களை அலுவலர்களை கண்காணிக்க வேண்டும். சாலையோரம் குப்பைகொட்டுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, உணவகங்கள் கடைகளாக இருக்கும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Views: - 401

0

0