உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர் குவியும் பாராட்டு

15 September 2020, 10:49 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் ஆட்சியர் வளாகத்தில் உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சுயநினைவின்றி உயிருக்குப் போராடிய நிலையில் தரையில் கடந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த திருவாரூர் ரோந்து காவல்துறையினர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி முதியவர் முகத்தில் தண்ணீர் தெளித்து உள்ளனர். சுயநினைவுக்கு திரும்பாத முதியவரை காவல்துறையினர் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் முதியவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் காவல்துறையினரும் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் முதியவரை திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை மீட்ட இருந்து காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Views: - 7

0

0