நாளை முதல் மீண்டும் ஊரடங்கு : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை!!

9 May 2021, 12:36 pm
Agni Theertham- Updatenews360
Quick Share

கொரோனா பரவலை தடுக்க நாளை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாளை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்யவும் நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்துவரும் நிலையில், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் ராமேஸ்வரம் அக்னி கடலில் புனித நீராட யாருக்கும் அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 81

0

0