சூடு பிடிக்கத் தொடங்கிய வத்தல் தொழில்: நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

5 March 2021, 10:34 pm
Quick Share

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே வெயில் காலம் தொடங்கியதால் சூடு பிடிக்கத் தொடங்கியதால் வத்தல் தொழில் நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட போலியனூர் கிராமத்தில் மிளகாய், கத்திரிக்காய், சுண்டைக்காய் மாங்காய் மற்றும் கொத்தவரை உள்ளிட்ட வத்தல் தொழில் செய்யும் பணியாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். வத்தல் தொழிலுக்கு வெயில் சூழல் சாதகமானது. தற்போது வெயில் காலம் தொடங்கியதால் வத்தல் தொழிலில் ஈடுபட்டுவரும் பணியார்கள் வத்தலை உலர வைத்து பிரித்து எடுத்து,

தமிழகத்தில் உள்ள தேனி , ஈரோடு, மதுரை பல்வேறு மாவட்டங்களுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் 30 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை வத்தல் 3000 ரூபாய் விற்பனையாக செய்வதால் வத்தல் தொழில் செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி உள்ளனர்.

Views: - 14

0

0