தலைமை செயலக அதிகாரிக்கு வெட்டு: மனைவி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகள் பறிப்பு

29 November 2020, 1:21 pm
Quick Share

புதுச்சேரி: தலைமை செயலக அதிகாரியை வெட்டி அவர் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார், இவர் தனது மனைவி லதாவுடன் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் லதா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகளை பறிக்க முயன்றனர்.

அப்போது நகை பறிப்பை தடுக்க முயன்ற ரவிசந்திரனை அந்த நபர்கள் கையில் வெட்டி ,லதா கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவிசந்திரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 12

0

0