கொரோனா தடுப்பூசி முகாமில் விழிப்புணர்வு பாடல்களுடன் நடன கலைநிகழ்ச்சி

22 June 2021, 6:31 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் கொரோனா தடுப்பூசி முகாமில் விழிப்புணர்வு பாடல்களுடன் நடன கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் நூற்றாண்டு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கோவிசீல்டு தடுப்பூசிகள் 300 பேருக்கு போடப்பட்டன. மருத்துவர் முகம்மது பாசில் தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதை போல் தரகுமண்டி வர்த்தக சங்கம் சார்பில் தரகுமண்டியில் பணியாற்றும் பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தார்கள் மற்றும் கடை உரிமையாளர், அவர்களின் குடும்பத்தார்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 706 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 776 தடுப்பூசிகளும் இரண்டாவது தவணையாக 29 ஆயிரத்து 35 தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இளம் வயதினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முக கவசம் அணிதல், சோப்பு போட்டு கை கழுவுதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல், கொரோனா தடுப்பு ஊசி போடுதல் போன்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்களுக்கு, நடன கலை கூட குழுவினர் நடனமாடினர்.

Views: - 110

0

0