அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வழங்க கோரி வாக்குவாதம்

5 March 2021, 6:26 pm
Quick Share

திருவண்ணாமலை: குப்பனத்தம் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.

கடந்த மாதம் 24ஆம் தேதி குப்பனத்தம் நீர்தேக்க அணையிலிருந்து பத்து நாட்களுக்கு வினாடிக்கு 260 கன அடி வீதமும் மீதமுள்ள பத்து நாட்களுக்கு வினாடிக்கு 230 கன அடி தண்ணீர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சுமார் 47 ஏரிகள் மூலம் 7148 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் குப்பனத்தம் அணையிலிருந்து முதலாவது ஏரியாக செங்கம் ஏரி நிரம்பி அதன் மூலம் கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால் செங்கம் ஏரி நிரம்பி மூன்று நாட்கள் கடந்தும் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆற்றிலிருந்து செங்கம் ஏரிக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கரியமங்கலம் விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டதற்கு செங்கம் ஏரி உடையும் அபாயம் உள்ளதால் தண்ணீர் திறக்க வழியில்லை என அலட்சியபடுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயிகள் தற்போது 1 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணியின் கீழ் புரணமைக்கப்பட்ட ஏரி எப்படி உடையும் என கேட்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வந்த செங்கம் போலீசார் விவசாயிகளிடம் சமரசத்தில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தபின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Views: - 5

0

0