சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு

26 January 2021, 10:01 pm
Quick Share

திருச்சி: சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாமானிய மக்கள் நல கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன் கூறியுள்ளார்.

சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் குணசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் பேசியதாவது:- சாமானிய மக்கள் நல கட்சியானது தமிழகத்தில்
இயற்கை வள பாதுகாப்பு, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளர்ச்சி முதலான கொள்கைகளை முன்னிறுத்தி மக்களுக்கான மாற்று அரசியலை முன்னெடுக்க வருகிறது.

சாமானிய மக்கள் நல கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஊன்று கோல்சின்னம் வழங்கி உள்ளது. வருகிற சட்டமன்ற பேட்டியிட கூடிய 13பேர் அடங்கிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருவரங்கம், திருச்சி கிழக்கு, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், ஆகிய 6தொகுதிகளிலும், கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளிலும்,
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதியிலும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தொகுதியிலும், தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் தஞ்சாவூர் பகுதியிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம்.

மேலும், வரும் பிப்ரவரி மாதம் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலும் தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட உள்ளோம். சாமானிய மக்கள் கட்சி 50 இடங்களில் போட்டியிட உள்ளோம். மேலும் சமூக நல ஆர்வலர்கள், சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து இத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து வேலை செய்து வருகிறோம். கரூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் கணிசமான ஓட்டு வாங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 2

0

0